அடடே.. நம்ம துணிவு வில்லன் நடிகரின் மனைவியா இவர்?.. கர்ப்பிணியாக கடல் அன்னையை அணைத்தவாறு பீச்சில் அசத்தல் கிளிக்ஸ்..!

அடடே.. நம்ம துணிவு வில்லன் நடிகரின் மனைவியா இவர்?.. கர்ப்பிணியாக கடல் அன்னையை அணைத்தவாறு பீச்சில் அசத்தல் கிளிக்ஸ்..!


Actor John Kokken Wife Pooja Ramachandran Pregnant Beach Side Pic Goes Viral

பிரபல வில்லன் நடிகரின் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அவர் கடற்கரை உடையில் நடிகை வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஜான் கொக்கன். இவர் கடந்த 2012ல் மீரா வாசுதேவன் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2016ல் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். 

அதனைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஜான் கொக்கன் பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பூஜா நடிகை மற்றும் விஜே ஆவார். தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் ஜான் கொக்கன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். 

John Kokken

இவர் தமிழில் வெளியான பாகுபலி, கே.ஜி.எப்., சார்பட்டா பரம்பரை, துணிவு உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், பூஜா இராமச்சந்திரன் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், இருவரும் தங்களின் குழந்தைக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். 

இதற்கிடையில், நடிகை பூஜா இராமச்சந்திரன் கடற்கரையில் கர்ப்பிணியாக கடல் அன்னையை ஆரத்தழுவி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

கடற்கரையில் ஜான் கொக்கன் மனைவி...