உடல் எடை முற்றிலும் குறைந்து, மெலிந்த தேகத்துடன் நடிகர் ஜனகராஜ்; அதிர்ச்சியை தந்த புகைப்படம்.!



actor-janagaraj-recent-look


தமிழ் திரையுலகில் நகைச் சுவை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஜனகராஜ் (Janagaraj). இவர்  90களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாண்டாத்தார். 

என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற வசனத்திற்கும், அந்த கொண்டாட்டத்திற்கு முதலில் சொந்தக்காரராக இவர் இருக்கிறார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1978 ம் ஆண்டு தொடங்கிய ஜனகராஜின் திரை வாழ்க்கை, தற்போது வரை தொடருகிறது. 

tamil cinema

வயது காரணமாக 2002ம் ஆண்டுக்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஜனகராஜ்,  கடந்த 2018ல் வெளியான 96 படத்தில் மீண்டும் வரவேற்பை பெற்றார்.

அப்படத்தில் இருந்த தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, உடல் மெலிந்து காணப்படும் நடிகர் ஜனகராஜின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. 

ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் ஜனகராஜ் நடித்த பல திரைப்படங்கள் காமெடியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தன. அவரின் குரல் வெளிப்பாடுக்கே ரசிகர்கள் கூட்டம் ஏராளமாய் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.