ராட்சசன் படத்தில் நடிக்க முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது... பிரபல நடிகர் ஓபன் டாக்!! யார் அவர் தெரியுமா.?

ராட்சசன் படத்தில் நடிக்க முதலில் எனக்கு தான் வாய்ப்பு வந்தது... பிரபல நடிகர் ஓபன் டாக்!! யார் அவர் தெரியுமா.?



actor-jai-missed-ratchsan-movie-offer

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது. 

மேலும் இப்படம் நடிகர் விஷ்ணு விஷாலின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது.சைக்கோ த்ரில்லர் படமான இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். ராட்சசன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

Actor Jai

இந்நிலையில் தற்போது ராட்சசன் படத்தில் முதலில் நடிக்க தனக்கு தான் வாய்ப்பு வந்தது என நடிகர் ஜெய் கூறி இருக்கிறார். நடிகர் ஜெய் தற்போது பட்டாம்பூச்சி என்ற படத்தில் சைக்கோ கொலைகாரனாக நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் அளித்த பேட்டியில் ராட்சசன் படம் பற்றி கூறி இருக்கிறார்.