சினிமா

கொஞ்சம் கூட மேக்கப் இல்லைங்க..! அம்மாவுடன் டப்மாஷ் செய்த ஜெனிலியா.. வைரல் வீடியோ!

Summary:

நடிகை ஜெனிலியா அவரது அம்மாவுடன் உள்ள குயூட் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜெனிலியா அவரது அம்மாவுடன் உள்ள குயூட் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றதை அடுத்து ஜெனிலியாவுக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.

விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் உத்தமபுத்திரன் போன்ற வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். பின்னர் அவர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர்.  தற்போது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜெனிலியா.

இந்நிலையில் தனது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் தனது அம்மாவுடன் ஆங்கில பாடல் ஒன்றுக்கு டப்மாஷ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில்  ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Advertisement