அதிர்ச்சி.. பிரபல நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பார் கொரோனாவுக்கு பலி.! பேரதிர்ச்சியில் திரைத்துறையினர்.!

அதிர்ச்சி.. பிரபல நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பார் கொரோனாவுக்கு பலி.! பேரதிர்ச்சியில் திரைத்துறையினர்.!


actor-died-for-corona

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதி தீவிரமெடுத்து வருகிறது. இத்தகைய கொடூர தொற்றால் ஏராளமான திரைப்பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அடுத்தடுத்ததாக இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.

சமீபகாலமாக நடிகர்கள் எஸ்.பி.பி, பாண்டு, மாறன், நிதீஷ் வீரா, ஜோக்கர் துளசி, கேவி ஆனந்த், தாமிரா போன்றவர்கள் கொரோனா பெறுந்தொற்றுக்கு பலியானார்கள். இந்த நிலையில் பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனர் ராஜூ முருகனின் சகோதரருமான குரு ராஜேந்திரன் கொரோனாவால் நேற்று உயிரிழந்தார்.

actor

குரு ராஜேந்திரன் கற்றது தமிழ், ஜோக்கர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குரு ராஜேந்திரன் 15 நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். குருவின் மரணத்திற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.