சினிமா

பழம்பெரும் பாலிவுட் நடிகர் காலமானார்.! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை.!

Summary:

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். 

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார். 

பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திலீப் குமார் இன்று காலமானார். திலீப்குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-இல் பெற்றவர் திலீப் குமார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

அவரது நடிப்பில் வெளியான ‘தேவ்தாஸ்’, ‘மொகல்-இ-அஸாம்’, ‘கங்கா ஜமுனா’ உள்ளிட்ட படங்கள் இன்றும் பாலிவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. 65க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலீப் குமார் இறுதியாக 1998ஆம் ஆண்டு வெளியான ‘கிலா’ என்ற படத்தில் நடித்திருந்தார். திலீப் குமாரின் மறைவுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement