ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் தனுஷ்; வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்.!
தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தை கொண்ட நடிகர் தனுஷ். கடந்த 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமான நடிகர் தனுஷ், இன்று பல விமர்சனங்களை கடந்து, உழைப்பால் உயர்ந்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
இவரின் நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் வணிக ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வெற்றி அடைந்து இருக்கின்றன.
தற்போது தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் ஜனவரி 12, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள நடிகர் தனுஷுடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.