நடிகர் தனுசுக்கு கிடைத்த வேற லெவல் பிரம்மாண்ட வாய்ப்பு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் தனுசுக்கு கிடைத்த வேற லெவல் பிரம்மாண்ட வாய்ப்பு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! கொண்டாடும் ரசிகர்கள்!


actor dhanush going to act in  hollywood movie

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, பின்னர்  ஏராளமான வெற்றி  திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். மேலும் தனுஷ் தற்போது நடிகர் மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட்கேம் உள்ளிட்ட  சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர்கள் அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ இருவரும் சேர்ந்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்திற்கு தி கிரே மேன் என பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் மற்றும்  அனா டி அர்மாஸ், ஜெசிகா ஹென்விக், வாக்னர் மவுரா, மற்றும் ஜூலியா பட்டர்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்த  அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் நடிகர் தனுஷ் அதுகுறித்த தகவலை பகிர்ந்து உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் தொடர் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.