திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குழந்தைக்கு முதல் முடி எடுத்த நடிகர் தனுஷ்! யார் அந்த குழந்தை?actor danush in thirumala temple with his family

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடிகா் தனுஷ் தன் குடும்பத்துடன் திங்கள்கிழமை திருமலைக்கு வந்தாா். ஏழுமலையானை தரிசித்த பின்னர் வெளியே வந்த நடிகர் தனுசுடன் ஏராளமான ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தனுஷ் வந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் கோவில் வளாகத்தில் குவியத் தொடங்கினர். கூட்டம் அதிகரித்ததால், நடிகர் தனுஷை தேவஸ்தான நிர்வாகிகள் பாதுகாப்புடன் தனுஷ் அழைத்துச்செல்லப்பட்டார்.

நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படம் பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் "ஜகமே தந்திரம்", மாரி செல்வராஜ் இயக்கத்தில் "கர்ணன்" என்ற இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். மேலும், "அந்தராங்கி ரே" என்ற  இந்தி படத்திலும்  நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த பரபரப்பான சூழ்நிலையிலும் நடிகர் தனுஷ் குடும்பத்துடன் கோவிலுக்குச்சென்றுள்ளார்.

நடிகர் தனுஷ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தன் சகோதரி மற்றும் சகோதரரின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அங்கு கோவிலில் தனுஷின் சகோதரி மக்களுக்கு மொட்டை போட்டுள்ளனர். தாய்மாமன் என்ற முறையில் நடிகர் தனுஷ் குழந்தைக்கு முதல்முடி எடுத்துள்ளார்.