சினிமா

"தரமான சம்பவம் செஞ்சிடீங்க" பேட்ட குறித்து நடிகர் தனுஷ் உற்சாகமான கருத்து!

Summary:

actor danush about petta

இன்று உலகமெங்கும் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படத்தினை பார்த்த ரஜினியின் மருமகனும் நடிகருமான தனுஷ் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’ திரைப்படம் இன்று ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ரஜினியின் இளமைத் தோற்றத்தில் வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இன்று அதிகாலை வெளியான இந்தப் படத்தின் முதல் காட்சியை நடிகர் தனுஷ் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து உற்சாகத்துடன் பார்த்துள்ளார். இவரை பார்த்த ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். மேலும் தனுஷ், ரஜினியின் முதல் காட்சிக்கு ரசிகர்களோடு சேர்ந்து நடனமாடியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த முடித்த நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பேட்ட படம் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில், "பேட்ட சூப்பர் ஸ்டாரின் அடுத்த ஒரு சகாப்தம். லவ் யூ தலைவா.. தரமான சம்பவம் செஞ்சுட்டீங்க. மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள். குறிப்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுக்கு கோடான கோடி நன்றி. மேலும் அனிருத்தின் பின்னணி இசை மிகவும் சிறப்பாக உள்ளது.. பேட்ட பராக்" என தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார். 


Advertisement