சினிமா

பிகில் இசைவெளியீடு.! பிரபல தொலைக்காட்சி செய்த குளறுபடியால் செம ஷாக்கான பிரபல நடிகர்! வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு!!

Summary:

actor daniel balaji tweet about bigil audiolaunch

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

கால் பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகிவரும் பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இந்நிலையில்  பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது.

அதில் நயன்தாரா தவிர அனைத்து பிரபலங்களும் கலந்துகொண்டு பேசினர். அதனை தொடர்ந்து பிகில் இசைவெளியீட்டு விழா நேற்று பிரபல தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பபட்டது. இந்நிலையில் தான் விஜய் குறித்து பேசியதில் சில பகுதிகளை சன் டிவி வெட்டியுள்ளதாக பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் குற்றசாட்டு ஒன்றை வைத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 


Advertisement