தமிழகம் சினிமா

நடிகர் பரத் மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.!

Summary:

actor bharth wife with two child

இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பரத். இப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. 

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த காதல் என்ற திரைப்படம் சிறந்த நடிகர் என்று பரத்தை அடையாளம் காட்டியது. மேலும், இவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.

தமிழ் சினிமாவில் சிக்ஸ் பேக் உடலமைப்புடன் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர்  தொடர்ந்து, எம் மகன், சேவல், பழனி போன்ற படங்களில் நடித்து ஒரு பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். மேலும் சினிமா நட்சத்திரங்களுக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டி தொடர்களில் தமிழக அணியில் இடம்பெற்று தனது திறமையை நிரூபித்தும் வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பரத் தனது நீண்டநாள் தோழியான ஜெஸ்ஸி என்பவரை  காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் இவர்களுக்கு அழகான இரட்டை குழந்தைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ளது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தனது மனைவி மற்றும் இரட்டை  குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்சமயம் நடிகர் பரத் வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் அதிகம் லைக் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.


 


Advertisement