சினிமா

புதுப்பேட்டை படத்தில் நடிகை சினேகாவுக்கு நடந்த கொடுமை! சற்றுமுன் வெளியான அதிர்ச்சி!

Summary:

Actor bala singh beat sneka in puthupettai movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் புன்னகை அரசி ஸ்னேகா. மலையாளம் திரைப்டம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் என்னவளே என்ற தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் ஆனந்தம், கணத்தில் முத்தமிட்டாள், புன்னகை தேசம், உன்னை நினைத்து என அடுத்தடுத்த படங்களில் நடித்தார் ஸ்னேகா.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வசீகரா திரைப்படம் இவரது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடித்தார். அதன்பின்னர் தமிழ் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் ஸ்னேகா புதுப்பேட்டை படத்தில் நடித்த போது நடிகர் ஒருவர் அவரை எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை படத்தில் நடிகை ஸ்னேகா விலை மாதுவாக நடித்திருப்பார். அப்போது நடிகர் பாலாசிங் சினேகாவை அடித்து துன்புறுத்துவதுபோல் ஒரு காட்சி அமைந்திருக்கும்.

இந்த காட்சி பலதடவை முயற்சி செய்தும் சரியாக வரவில்லையாம். இதனால் கடுப்பான பாலாசிங் உண்மையாகவே சினேகாவின் வயிற்றில் ஓங்கி மிதித்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிள்ளார்.


Advertisement