சினிமா

சின்ன வயதில்லையே காதல் தோல்வி..! தற்கொலை முயற்சி..! 33 வயதாகும் நடிகர் பாக்யராஜ் மகள் என்ன ஆனார்..? வைரலாகும் செய்தி.!

Summary:

Actor Backiya raj daughter saranya

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான குடும்பங்களில் ஓன்று பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவின் குடும்பம்.  இவர்களுக்கு சாந்தனு என்ற ஒரு மகனும், சரண்யா என்ற ஒரு மகளும் உள்ளனர்.

குடும்பமே சினிமாவில் பிரபலமானவர்கள். சாந்தனு தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். கடைசியாக தளபதியின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் சாந்தனு. இந்நிலையில் பாக்யராஜின் மகள் சரண்யா கடந்த, 2006 ஆம் ஆண்டு வெளியான பாரிஜாதம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

முதல் படத்திலையே படத்தின் நாயகன் ப்ரிதிவிராஜுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதன்பிறகு அது வெறும் வதந்தி உண்மை இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார் சரண்யா. இதனை அடுத்து ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவரை உயிருக்கு உயிராக சரண்யா காதலித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த காதல் தோல்வி அடைந்ததாக கூறப்படும் நிலையில் .தனது காதல் தோல்வியை தாங்கி கொள்ள முடியாத சரண்யா, வீட்டிலேயே தற் கொலை முயற்சி கூட செய்துள்ளார்.

உறவினர்கள் அவரை காப்பாற்றி அவருக்கு அறிவுரை கூறி அவரை காதல் தோல்வியில் இருந்து மீட்டுள்ளனர். தற்போது 33 வயதாகவும் சரண்யா திருமணம் செய்துகொள்ளாமல் வெளிநாட்டில் மேற்படிப்பு படித்துவருகிறார்.


Advertisement