சினிமா

யாஷிகாவின் தற்போதைய உடல்நிலை! நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

யாஷிகாவின் தற்போதைய நிலை! நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரபல நடிகர்! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதை தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். நடிகை யாஷிகாவுக்கு எஸ்.ஜே.சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்தில் முன்னணி ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இந்நிலையில் நடிகை யாஷிகா 
ஜுலை 25 ம் தேதி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு நண்பர்களுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்தில் சிக்கினார். இதில் யாஷிகாவின் உயிர்தோழியான வள்ளிஷெட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் யாஷிகாவிற்கு பயங்கர காயம் ஏற்பட்டது.

முதுகு, தோள் மற்றும் கால் பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சமீபத்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கிடையில் யாஷிகா படுக்கையில் காலில் கட்டுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகர் அசோக், தனது மனைவியுடன் சென்று நடிகை யாஷிகாவை சந்தித்துள்ளார். மேலும் இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த புகைப்படத்தில் யாஷிகா நிற்பது போல உள்ளது. அதனைக் கண்ட ரசிகர்கள் யாஷிகா எழுந்து நடக்கத் துவங்கிவிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.


Advertisement