நான் குழந்தையை காட்ட அவளிடம் கேட்கமாட்டேன்.! அதுக்கு இதுதான் காரணம்.! மனம் திறந்த செல்லம்மா நடிகர்!!

நான் குழந்தையை காட்ட அவளிடம் கேட்கமாட்டேன்.! அதுக்கு இதுதான் காரணம்.! மனம் திறந்த செல்லம்மா நடிகர்!!


actor-arnav-talk-about-wife-and-his-baby

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர்கள் நடிகை திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகர் அர்னவ். திவ்யா ஏற்கனவே திருமணமாகி 6 வயதில் மகள் இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்றவர். இந்நிலையில் சீரியலில் நடித்தபோது திவ்யா மற்றும் அர்னவ்க்கு இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யா சன் டிவியில் செவ்வந்தி தொடரில் நடித்து வந்துள்ளார். மேலும் அர்ணவ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா தொடரில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை திவ்யா கர்ப்பம் அடைந்துள்ளார். இப்படியொரு நிலையில் அர்ணவ் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவருக்கு செல்லம்மா சீரியல் ஹீரோயினுடன் தொடர்புள்ளது, அதை கேட்டதால் அர்னவ் தன்னை தாக்கினார் எனவும் திவ்யா வீடியோ வெளியிட்டு அர்னவ் மீது வழக்குபதிந்தார். 

மேலும் அர்ணவ்வும் திவ்யா மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். பின் கைது செய்யப்பட்ட அர்ணவ் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் அண்மையில் திவ்யாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் அர்னவ்விடம் ஈகோவை விட்டுவிட்டு குழந்தையை பாருங்கள். மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள் என அட்வைஸ் செய்து வந்தனர்.

arnav

அதன் பிறகு பேட்டி ஒன்றில் இதுகுறித்து மனம் திறந்து பேசிய அர்னவ் நான் காதலுக்காக எனது குடும்பத்தை எதிர்த்து வந்தேன். ஆனால் அதற்கான தண்டனையை தற்போது வரை அனுபவித்து வருகிறேன். என் மகளை பார்க்க வேண்டும் என மிகவும் ஆசையாக இருக்கிறது. என் குழந்தையை தூக்க முடியாமல் தவிக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில் குழந்தை மீது பாசம் இருப்பது போல் பேட்டிகளில் பேசி வருகிறார் ஆனால் இதுவரை குழந்தையை பார்க்கவில்லை என பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் அவர், திவ்யா என் குடும்பம் நாசமாக போக வேண்டும் என மண்ணை வாரி தூற்றி சாபம் விட்டுவிட்டு போனார். அவரது முகத்தை பார்க்க கூட விரும்பவில்லை. அவரிடம் குழந்தையை காட்டுமாறு நான் கேட்கமாட்டேன் என அர்ணவ் கூறியுள்ளார்.