நடிகையை காதலியாக்கி மதம்மாற்றி கரம்பிடித்து கர்ப்பமானதும் கைவிட்டுச்சென்ற சீரியல் நடிகர்.. கேடித்தனத்தை அம்பலப்படுத்திய ஆடியோ..!!

நடிகையை காதலியாக்கி மதம்மாற்றி கரம்பிடித்து கர்ப்பமானதும் கைவிட்டுச்சென்ற சீரியல் நடிகர்.. கேடித்தனத்தை அம்பலப்படுத்திய ஆடியோ..!!


Actor Arnav Divya Sri Issue Update

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியலில் நடித்து வந்த நடிகை திவ்யஸ்ரீ. அதனைப் போல, செல்லம்மா நெடுந்தொடரில் கதாநாயகனாக நடித்தவர் அர்னவ் என்ற நைனார் முகமது. இவர் சீரியல் நடிகையான திவ்யஸ்ரீயை காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். 

தற்போது, நடிகை திவ்யஸ்ரீ கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவரை கைவிட்டு சென்றதாக தெரியவருகிறது. மேலும், வேறொரு சீரியலில் நடிக்கும் நடிகையுடன் பழகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக நடிகை திவ்யஸ்ரீ கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

Actor Arnav

இதற்கிடையே, என் மீது எந்த தவறும் இல்லை. நான் திவ்ய ஸ்ரீயை திருமணமே செய்துகொள்ளவில்லை என்று ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் அர்னவ் பதில் கூறி இருந்தார். தன் மீது அவதூறு பரப்புவதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் திவ்ய ஸ்ரீ மனமுடைந்துபோன நிலையில், ஆடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திவ்யஸ்ரீ அர்னவ் தனது திருமணம் தொடர்பான தகவலை மறைக்க நண்பரிடம் யூடியூபில் தனக்கு திருமணம் நடக்கவில்லை. அது விளம்பரத்திற்காக எடுத்த புகைப்படம். விளம்பர விடியோவை பலரும் அவதூறாக சித்தரித்துவிட்டனர் என்று பணம் கொடுத்து பேசவைக்குமாறு கூறுகிறார். இதுகுறித்த ஆடியோ பதிவும் வைரலாகவே, வழக்கு விசாரணை அர்னவுக்கு எதிராக கிளம்பியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.