சினிமா

உங்கள மாதிரி இனி யாரும் பிறக்கபோவது இல்லை..! சீக்கிரம் வாங்க சார்..! அர்ஜூன் வெளியிட்ட வீடியோ..!

Summary:

Actor arjun video about SPB

பிரபல பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் அவர்கள் எஸ்.பி.பி பற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கடந்த ஐந்தாம் தேதி எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடக்கத்தில் அவரது உடல்நிலை சீராக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 

இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கினர். 

தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ...

தற்போது எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவருக்கு சுயநினைவு திரும்பிய உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் பற்றி நடிகர் அர்ஜுன் அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். "இனி ஒருவர் பிறந்து வந்தாலும் எஸ்.பி.பி போல் வரப்போவதில்லை. அவர் ஒரு வாழும் லெஜண்ட். நீங்கள் ஒரு ஃபைட்டர். விரைவில் திரும்பி வருவீர்கள். உலகில் பிரார்த்தனையை விட பெரிய மருந்து எதுவுமில்லை. விரைவில் உங்கள் புதிய பாடலை நாங்கள் கேட்போம்" என அந்த வீடியோவில் பேசியுள்ளார் நடிகர் அர்ஜுன்.


Advertisement