நடிகர் அர்ஜூனின் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி.! வீட்டில் தனிமை..!

நடிகர் அர்ஜூனின் மகள் நடிகை ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி.! வீட்டில் தனிமை..!


Actor Arjjune daughter Aishwarya corona test positive

தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரபல தமிழ் நடிகர் அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அவதாரம் எடுத்தவர் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன். பட்டத்து யானை படத்தை அடுத்து பிரேமா பரஹா என்ற கன்னட படத்திலும், சொல்லிவிடவா என்ற தமிழ் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

corona

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள அவர், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்  எனவும் கூறியுள்ளார்.

மேலும், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். விரைவில் நல்ல ஆரோக்கியத்துடன் உங்களைச் சந்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.