சினிமா

"முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு அண்ணாத்த.." ரஜினியுடன் நடித்தது குறித்து மெய்சிலிர்க்கும் இளம் நடிகர்!

Summary:

Actor arjay about rajini at annatha

ரஜினியை பார்த்து தொட்டு ரசிக்க பழனி அருள்மிகு தண்டாயதபானி முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு அண்ணாத்த என இளம் நடிகர் அர்ஜெய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பழினியில் பிறந்த நடிகர் அர்ஜெய் தமிழ் சினிமாவில் நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை, பாயும் புலி, தெறி, சண்டகோழி2, அயோக்யா, தேவி2, திட்டம் போட்டு திருடுற கூட்டம், வெல்வெட் நகரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் பெரிய அளவில் புகழ்பெறாத இவருக்கு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு பழனி அருள்மிகு தண்டாயதபானி முருகன் அருளால் கிடைத்த வாய்ப்பு என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement