திடீர் மாரடைப்பு! பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!!

திடீர் மாரடைப்பு! பிரபல நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!!


actor-aravind-trivethi-dead

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிரபலமான ராமாயணம் தொடரில் இராவணன் கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த் திரிவேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1987ஆம் ஆண்டு ராமானந்த் சாகர் இயக்கத்தில் ஒளிபரப்பான தொடர் ராமாயணம். இந்தியா அளவில் பிரபலமான இந்த தொடரில் ராவணன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் அரவிந்த் திரிவேதி. 

aravind trivethi

இவர் ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழியில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நடிகர் அரவிந்த் திரிவேதி பாஜக சார்பில் குஜராத்தில் எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார்.

மும்பை காந்திவெலி பகுதியில் வசித்து வந்த அவர் 87 வயதாகும் நிலையில், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இந்நிலையில் அவரது மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.