சிம்கார்டு வாங்கப்போன நடிகையை கடைக்குள் வைத்து பூட்டிய ஊழியர்.. காரசார வாக்குவாதத்தால் விபரீதம்..!!



actor annarajan aluva issue mobile shop

 

கோலிவுட் சினிமாவில் ரண்டு, ஐயப்பனும் கோஷியும், அங்கமாலி டைரிஸ் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை அன்னராஜன். இவர் ஆலுவாவில் உள்ள தனியார் தொழில்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சிம்கார்டு வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது நடிகைக்கும், ஊழியருக்கும் இடையில் சிம்கார்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த ஊழியர் நடிகையை அலுவலகத்திற்குள்ளே வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது. 

actor annarajan

அத்துடன் அன்னராஜன் ஊழியர் மீது ஆலுவா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி இருதரப்பினரையும் சுமூகமாக பேசியனுப்பியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.