சினிமா

கன்னடத்தில் தல அஜித்தின் விவேகத்திற்கு வசூல் மழை பொழிகிறது.!!!!!!!!!!!!!!!

Summary:

actor ajith-vivegam-dupping kannadam

டைரக்டர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த படம் விவேகம்.  இது ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது.  ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை.  தோல்வி படமாகவே அமைந்தது எனலாம்.

இந்நிலையில் இப்படம் கன்னடத்தில்' கமாண்டோ' என்று பெயர் மாற்றப்பட்டு டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளிவந்தது.  ஆனால், படம் கன்னடத்தில் செம்ம ஹிட் அடித்துள்ளது.  இதற்கு முன்பாக அங்கு வெளியிடப்பட்ட ' என்னை அறிந்தால்', ஆரம்பம் , ஆகிய படங்கள் இந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த  3 வாரங்களாக இப்படம்  வசூல் மழை பொலிந்து வருகின்றதாம். சுமார் ரூ.1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன் மூலம் அஜித்தின் மார்க்கெட் கன்னடத்தில் பல மடங்கு அதிகரித்து வருவது தெரிகின்றது.


Advertisement