இவரா?? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! அடுத்து ஒரு காமெடி நடிகர் மரணம்!! சோகத்தில் ரசிகர்கள்actor-aiyapan-gobi-passed-away

காக்கி சட்டை, சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் ஐய்யன் கோபி காலமானார்.

தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களாக நகைச்சுவை நடிகர்களின் அடுத்தடுத்து உயிரிழந்துவருவது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக், பாண்டு, ஜோக்கர் துளசி, நெல்லை சிவா, மாறன் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். இவரை தொடர்ந்து இன்று மேலும் ஒரு காமெடி நடிகர் உயிரிழந்துள்ளார். காக்கி சட்டை, சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் ஐய்யன் கோபி காலமானார்.

இவரது மறைவுக்கு காரணம் கொரோனா தொற்றா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்நிலையில் நடிகர் ஐய்யன் கோபியின் மறைவுக்கு பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

RIP Aiyapan Gobi