சினிமா

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பிரபல நடிகர்! ஏன்? என்னாச்சு! பதறவைக்கும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆதித்யா மேனன் விபத

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆதித்யா மேனன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டி மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆதித்யா மேனன். அவர் தற்போது தெலுங்கில் பிரபல நடிகர் பவன் கல்யாண் நடித்து வரும் ஹரிஹரா வீர மல்லு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சி அண்மையில் படமாக்கப்பட்டுள்ளது. அப்பொழுது குதிரையில் அமர்ந்தபடியே சண்டை போடுவது போன்ற காட்சியில் நடித்தபோது ஆதித்யா மேனன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது இத்தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படமும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் ஆதித்யா மேனன் விரைவில் குணமடைந்து வரவேண்டுமென பிரார்த்தனைகள் மேற்கொள்கின்றனர்.


Advertisement