கண்ணுக்கு தெரியாத சக்தி கடவுள்ன்னா? இதையும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும்.! - நடிகர் ஆதி.!



actor aadhi speech about ghosts

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ஆதி. இவரது நடிப்பில் மரகத நாணயம், மிருகம், அய்யனார், ஈரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இவரது தனிப்பட்ட திறமைக்காக நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். 

ஆதியின் நடிப்பில் வெளியாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சப்தம். இந்த திரைப்படம் ஓரிரு நாட்கள் முன்பாகவே தெலுங்கில் வெளியாகியது. நேற்றுதான் தமிழுக்கு வந்தது. இந்த திரைப்படம் இயக்குனர் அறிவழகனால் இயக்கப்பட்டது.

Actor aadhi

இப்படத்தில் ரெடிங் கிங்ஸ்லி, லைலா, சிம்ரன், லட்சுமிமேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். த்ரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த செயலால் கோபியை வெளுத்து வாங்கும் பாக்கியா! வைரல் ப்ரோமோ வீடியோ காட்சி...

இந்த நிலையில் இப்பட ஷூட்டிங்கின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து நடிகர் ஆதி பேட்டியளித்து இருக்கிறார். அதில், "சப்தம் திரைப்படம் சூட்டிங் நடந்தபோது நான் நிறைய அமானுஷ்ய விஷயங்களை பார்த்தேன். கண்ணுக்கு தெரியாமல் கடவுள் இருப்பதை நம்புகின்றனர். எனவே பேய்களையும் நம்பி தான் ஆகணும் என்று எனக்கு இப்போதுதான் தோன்றுகின்றது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "திருமணத்திற்கு பின் இப்படி ஆகிடுச்சு".. வேதனை தெரிவித்த ஜோதிகா.!