சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
ஜீவாவுடன் இணைந்து கலக்கும் கொரிலாவின் சேட்டை ஆரம்பம்; வெளியானது டிரைலர்.!
தமிழ் சினிமாவில் ஆசைஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. அதனை தொடர்ந்து அவர் தித்திக்குதே, ராம் டிஷ்யூம் தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் முகமூடி, போக்கிரி ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் அவருக்கு நீண்ட நாட்களாக படங்கள் எதுவும் வெற்றியை கொடுக்கும் வகையில் அமையவில்லை. இருப்பினும் அவர் வெற்றி படங்களை கொடுப்பதற்காக தீவிரமாக போராடி வருகிறார். இந்த ஆண்டு ஜீவா, கீ, ஜிப்ஸி, கொரிலா, சீறு, ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், அவர் தற்போது நடித்துள்ள ‘கொரில்லா’ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சாம் ஆண்டன் இயக்கியுள்ள இப்படத்தில், நடிகர் ஜீவாவுடன் சாலினி பாண்டே, யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார். அத்துடன் படத்தில் சிம்பன்ஸி குரங்கு ஒன்றும் நடித்துள்ளது. இதனால் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.