சினிமா

மிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்...! அந்த புகைப்படம் எது தெரியுமா?

Summary:

மிகவும் பிடித்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை மாளவிகா மோகனன்...! அது எந்த புகைப்படம் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ளார் மாளவிகா.இதன்பின்னர் தனுஷுடன் ஜோடி சேர்ந்து மாளவிகா மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், இன்று தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு மிகவும் பிடித்த புகைப்படம் எது என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தனது குடும்ப புகைப்படத்தை பதிவு செய்து, 'எல்லாமே எனது குடும்பம்' தான் என்று கூறியுள்ளார்.


Advertisement