96 படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள்

96 படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள்


96movie pastive results


மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பாக நந்தகோபால் தயாரிப்பில்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் 96. இப்படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்திற்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் தேவதர்ஷினி ,ஜனகராஜ் மற்றும் பகவதி பெருமாள் என சிறிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி  ட்ராவல்  போட்டோக்ராபர் ஆகா நடிக்கிறார் மிகவும் மெல்லிய காதல் கதை என இயக்குனர் தெரிவிக்கிறார் ,பின்னர் இருவரும் மலரும் நினைவுகள் பரிமாறிக்கொள்ளும் போல கதை செல்கிறதாம் படத்தின் கதைப்படி விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பள்ளிகால தோழர்கள் ஒருசில காரணங்களால் இவர்கள் பிரிந்து விடுகின்றனர். பின்னர் வெகு நாட்களுக்கு பிறகு பள்ளி பழைய மாணவர்கள் சேரும் போது இவர்கள் சந்தித்து கொள்கின்றனர். பிறகு இவர்கள் வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள், இருவரின் ப்ளாஷ் பேக்குகள், இருவரும் சேர்ந்தார்களா என படம் அழகாக காட்சிபடுத்தியுள்ளாராம் இயக்குனர்.  பாடல்கள் அனைத்தும் அருமையாக இருப்பதாகவும், சரியான இடங்களில் வருவதாகவும் கூறினர். மேலும் பள்ளிபருவ காட்சிகள் அனைத்தும் நம்மை பள்ளிபருவத்திற்கே அழைத்து சென்று விட்டனர்..இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி, உடன் நடிக்கும் திரிஷாவின்  ஆசை நிறைவேறியது என திரிஷா தெரிவித்துள்ளார் செய்தியாளர்கள் சந்திப்பில் இபாபடத்தின் பிரீமியர் காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு காண்பிக்கபட்டது. அதனை பார்த்த அனைவரும்  வெகுவாக பாராட்டியுள்ளனர்.


 இந்த  படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களே பத்திரிக்கையாளர்களிடம் இருந்து வருகிறது.இப்படம் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி வெளிவர உள்ளது .