90களில் கொடிகட்டி பரந்த முன்னணி நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே!
1990ஆம் ஆண்டு மிஸ்டர் கார்த்திக் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிவரஞ்சனி. 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த அரண்மனை காவலன் என்ற திரைப்படம் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தது.
அதன்பின்னர் தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான இவர் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார்.
1998 ஆம் ஆண்டு வெளியான துர்கை அம்மன் படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் இவர் என்ன ஆனார்? எப்படி உள்ளார் என ரசிகர்களுக்கு எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.