எதிர்பார்ப்பை எகிற வைத்த 83 பட ட்ரைலர்! கொண்டாடி டிரெண்டாக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்!!83-movie-teaser-released

1983 ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பை வென்றதையும், கபில்தேவ் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள 83  படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உலக்கோப்பை போட்டிகளில் அரையிறுதிக்கு கூட முன்னேறாத  இந்திய அணி முதன்முறையாக இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது. அத்தகைய போட்டிகளில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி மிகவும் அபாராமாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது. 

இந்த நிலையில் அந்த சாதனையை நினைவுக்கூரும் வகையில் 83 என்ற திரைப்படம் உருவாகிறது. இந்தப் படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் தீபிகா படுகோனேவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 83 திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகி பெரும் அளவில் வைரலாகி வருகிறது. இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர். மேலும் 83 திரைப்படம்  தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது.