கண் வலியால் அவதிபட்ட முதியவர்! பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

கண் வலியால் அவதிபட்ட முதியவர்! பரிசோதித்த மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!


7cm live worm removed from 70 year old man in mumbai

மும்பை அருகே விரார் நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர் 70 வயதான விவசாயி ஜஷூ பட்டேல். இவர் கடந்த 2 மாதங்களாக கடும் கண் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பிரபல மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார் ஜஷூ பட்டேல்.

ஜஷூ பட்டேல் கண் முழுவதும் தீவிர பரிசோதனை செய்த மருத்துவர்களுக்கு சோதனையின் முடிவில் பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஜஷூ பட்டேல் கண்ணின் கரு விழியில் சுமார் 7cm நீளமுள்ள புழு ஓன்று உயிருடன் இருந்துள்ளது. மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சைக்கு பிறகே இந்த புழுவை நீக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Mystry

இதனை அடுத்து சுமார் 30 நிமிடம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்கள் அந்த புழுவை ஜஷூ பட்டேல் கண்ணில் இருந்து நீக்கியுள்ளனர். சுமார் 12 வருடத்திற்கு முன் ஜஷூ பட்டேலை நாய் கடித்ததாகவும், அந்த நாய் கடி மூலம் கிருமி இரத்தத்தில் கலந்து இதுபோன்று புழுவாக வளர்ந்திருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.