சினிமா

அதிக எதிர்பருப்புக்கு இடையே வெளியானது 2.O திரைப்படத்தின் டீஸர்

Summary:

2.0 Teaser Release

அதிக எதிர்பருப்புக்கு இடையே வெளியானது 2.O திரைப்படத்தின் டீஸர் 


மாபெரும்  முதலீட்டில் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் திரைப்படம் 2.O.

இரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் 2.O டீஸர் இன்று (வியாழக்கிழமை) 9.00 மணிக்கு வெளியிடப்பட்டது.இந்த டீஸர்  இரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டுஇருக்கிறது 

லைக்கா ப்ரொடக்ஷன்  பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகிகொண்டுஇருக்கும்   2.O திரைப்படத்தின் டீஸரானது முதன்முறையாக  3D வெளியாகியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘எந்திரன் இந்த படத்தை தொடர்ந்து  படத்தின் இரண்டாம் பாகமாக ‘2.O’ படத்தில் ரஜினிகாந்த், பொலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ளனர் இந்த படம் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ஏற்கனவே இரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், விநாயகர் சதுர்த்தி நாளான இன்று 2D மற்றும் 3D யில் வெளியாகியுள்ள 2.O டீஸரும் இரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


Advertisement