சினிமா

பரோட்டா சூரியையே ஏமாற்றிய படத்தயாரிப்பாளர்கள்! கோடிக்கணக்கில் பண மோசடி! போலீசில் பரபரப்பு புகார்!

Summary:

நிலம் வாங்கி தருவதாக நடிகர் சூரியிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் 2 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சூரி. அதனைத்தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்களின் திரைப்படங்களில் தனது காமெடியால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி தற்போது முன்னணி காமெடி நடிகராக உள்ளார். 

 மேலும் சூரி மதுரையில் உயர்தர உணவகங்களையும்  நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பட தயாரிப்பாளர்கள் 2பேர் ரூ.2.70 கோடி மோசடி செய்துள்ளதாக சூரி தரப்பிலிருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது நடிகர் சூரியிடம் நிலம் வாங்கித் தருவதாக வீர தீர சூரன் படத்தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், ரமேஷ் ஆகியோர் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரதீரசூரன் படத்தில் நடித்ததற்காக தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் நடிகர் சூரிக்கு 40 லட்சம் சம்பள  பாக்கி வைத்திருந்ததாகவும் அதனை தர மறுத்த நிலையிலேயே நிலம் வாங்கி தருவதாக கூறி சூரியிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து சூரி அளித்த புகாரின் அடிப்படையில் அடையாறு காவல் நிலைய போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    


Advertisement