தமிழகம் சினிமா

18 வயது பெண்ணிடம் கவிஞர் வைரமுத்து சில்மிசம் செய்தது எப்படி ..!! வைரலாகும் ட்விட்டர் பதிவு.. !

Summary:

18 years old girl complaint against to lyricist writter vairamuththu

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சினிமா துறையில் உள்ள பெண்களுக்கு இது சற்று அதிகமாகவே உள்ளது. இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கு தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டனர் என நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு புகாரை கூறியது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தமிழில் பிரபல கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முகம் தெரியாத பெண் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் சம்மந்தமாக #MeToo என்ற வார்த்தை பிரபலமாகி வருகிறது. 

சமீபத்தில் சந்தியா மேனன் என்ற பெண் கவிஞர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெயர் தெரியாத இளம் பெண் ஒருவர் தனக்கு அனுப்பிய மெசேஜ் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், எனக்கு 18 வயது ஆகிறது நான் அவருடன் (வைரமுத்து) பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்றியபோது அவர் ஒரு நல்ல மனிதர் என்றும், தேசிய விருது பெற்ற கவிஞர் என்றும் நான் மதித்தேன்.

ஒருமுறை அவரிடம் நான் எழுதிய பாடல் வரிகளை சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் என்னை கட்டியணைத்தும், முத்தம் கொடுத்ததும் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டேன். இந்த சம்பவம் நடந்தபோது அவரது அலுவலகம் கோடம்பாக்கத்தில் இருந்தது, என்னை தனிமையில் அவரை சந்திக்க பலரும் கூறினார்கள். அவர் சினிமா துறையில் பெரிய ஆள் என்பதால் அவர் செய்யும் தவறுகளை யாரும் கேட்பது இல்லை.

அவருக்கு அரசியலில் நிறைய ஆட்கள் தெரிந்திருப்பதால் அவர் செய்யும் தவறுகளை யாரும் வெளியே சொல்ல முடியவில்லை. நான் யார் என்று தெரியாத ஒரு பெண்ணாகவே இருந்து விடுகிறேன் என்று அந்த மேசேஜில் கூறியுள்ளார். 


Advertisement