தமிழகம் வர்த்தகம்

மகிழ்ச்சியான செய்தி.! தங்கம் விலை திடீர் குறைவு.! உச்சகட்ட மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Summary:

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் உலக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த நிலையில் பிற தொழில்களில் முதலீடு செய்ய பலரும் தயங்கி, தங்கத்தில் அதிக முதலீடு செய்ய தொடங்கினர். இதன்காரணமாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்தது.

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 40 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் என இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று, 22 கார்ட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,340 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 35,720 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

24 காரட் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்து, ஒரு கிராம் ரூ. 4,724 ஆகவும், 8 கிராம் தங்கம் ரூ. 37,792 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை ஒரு கிலோவிற்கு ரூ. 1,700 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 72.30 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ. 72,300 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


Advertisement