தமிழகம் இந்தியா வர்த்தகம்

கிடுகிடுவென குறையும் தங்கத்தின் விலை! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Summary:

gold rate reduced


தங்கம் மற்றும் வெள்ளி மக்களுக்கு அத்தியாவசிய பொருள் இல்லை என்றாலும், மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை போட்டிபோட்டு வாங்குகின்றனர். சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை அதிகரித்தது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் தங்கத்தின் விலை அதிகரித்தது.

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து உயர்ந்து செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியாது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைந்துள்ளது. இந்தநிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 224 ரூபாய் குறைந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 28 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 584 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை 224 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்‌பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்துவருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement