குட் நியூஸ்! ஒரே நாளில் ரூ.880 க்கு குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ....



chennai-gold-silver-price-drop

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று திடீரெனக் குறைந்ததால் நுகர்வோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விலை உயர்வால் அதிர்ச்சியடைந்த மக்களுக்கு இந்த மாற்றம் ஒரு சிறிய நிவாரணமாக கருதப்படுகிறது.

தங்கம் விலை குறைவு

இன்று ஆபரண தங்கம் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து, ஒரு சவரன் ரூ.880 குறைந்துள்ளது. இதனால், ஒரு சவரன் ரூ.86,720க்கும், ஒரு கிராம் ரூ.10,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்துடன் சேர்த்து வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.161க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவால் நகை சந்தையில் மீண்டும் வாங்குதல் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: குஷியோ குஷி! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ....

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த திடீர் குறைவு, அடுத்த சில நாட்களில் சந்தை நிலவரத்தை மாற்றக்கூடும் என்பதால் அனைவரும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை! நகைக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி விலை! ஒரே நாளில் சவரனுக்கு இவ்வளவு உயர்வா!