பிக்பாஸ்

முதல் நாளே வெடித்தது பிரச்சனை! கலைகட்டுமா பிக்பாஸ் சீசன்-3?

Summary:

first problem in bigboss 3

தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் இன்று துவங்கியுள்ளது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அணைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.

கடந்த இரண்டு சீசனில் இருந்த பிக்பாஸ் வீட்டை போன்று இல்லாமல் இந்த முறை வீட்டின் உள்ளே பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான வீட்டில் முதல் 15 போட்டியாளர்களும் முதல் நாளே உள்ளே சென்றுவிட்டனர். இதில் 8 பெண்கள் மட்டும் 7 ஆண்கள் உள்ளே சென்றுள்ளனர்.

கடந்த இரண்டு சீசனில் இருந்த வீட்டில் ஆண்கள் மட்டும் பெண்களுக்கு தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இடையே தடுப்பு சுவர் இருந்தது. ஆனால் இந்த முறை தனி தனி அறைகள் ஒதுக்கப்பட்டாலும் இடையே தடுப்புகள் ஏதும் இல்லை. இது உள்ளே சென்ற போட்டியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து உள்ளே சென்றுள்ள நடன இயக்குனர் சாண்டி முதல் நாளே பிக்பாஸ்ஸிடம் இது குறித்து முறையிட துவங்கிவிட்டார். உள்ளே இருக்கும் கேமரா முன்பு பேசிய சாண்டி, "இப்படி ஒப்பான இருந்தா டிரஸ்லாம் எப்புடி மாத்துறது, கூச்சமா இருக்காதா? சீக்கிரமா இத மறைங்க பிக் பாஸ்" என்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement