
bigboss3-rashma
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கு போட்டியாளர்களாக வந்துள்ளார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.டீவி சீரியல்கள் மூலமாக புகழ் பெற்றவர் ரேஷ்மா. இவர் மாடலாகவும் இருந்துள்ளார். சினிமாக்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாப்பாத்திரம்மிகப்பெரிய அளவில் இவரை பிரபலப்படுத்தியது.
இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் அவர் தன் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் பற்றி பேசியுள்ளார்.
முதல் திருமணம் 18 வயதில் நடந்தது, பெற்றோர் பார்த்து நடந்த திருமணம். அவருக்கு எனக்கும் செட் ஆகவில்லை. மேலும் அவர் என்னை படிக்கவிடவில்லை, சிறையில் இருப்பது போல இருந்தது. அவருடன் ஒரு எனக்கு ஒரு பையன் இருக்கிறான். இனிமேல் முடியாது என விவாகரத்து பெற்றுவிட்டேன். கஷ்டப்பட்டு பையனை வளர்த்தேன்.
இரண்டு வருடம் கழித்து அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டேன். அவருடன் நான் 5 மாதம் கர்பமாக இருந்தபோது என் கணவர் என்னை ஏமாற்றுகிறார் என அறிந்தேன்.இதனால் ஐந்தரை மாதத்திலேயே குழந்தையை பெற்றெடுக்கும் நிலைக்கு ஆளான ரேஷ்மா, அமெரிக்காவில் தானாக காரை ஓட்டிச் சென்று மருத்துவமனையில் சேர்ந்தார். காரை ஓட்டிச்செல்லும் போதே தனது ஐந்து மாத குழந்தை வெளியே வந்துவிட்டது.
இதைத்தொடர்ந்து 5 மாதம் இன்குபேட்டரில் வைக்கப்பட்ட அந்த குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளையும் பெரும் கஷ்டப்பட்டு உடன் பிறந்தவர்களின் எந்த ஆதரவும் இன்றி வளர்த்து வருவதாக ரேஷ்மா கூறினார்.
இதை கேட்டு மொத்த பிக்பாஸ் குடும்பமே கண்ணீரில் மூழ்கியது.
Advertisement
Advertisement