ஹோட்டலுக்குள் சாவகாசமாக நுழைந்த 12 அடி நீள முதலை! கிச்சனில் சாப்பாடு தேடி அலைந்த அந்த காட்சி.... திக் திக் வீடியோ..!!!
ஜிம்பாப்வேயில் சொகுசு ஹோட்டலுக்குள் புகுந்த 12 அடி நைல் முதலை சுற்றுலாப் பயணிகளை அதிர்ச்சியடைய வைத்தது. வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனர்.
ஜிம்பாப்வேயில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலுக்குள் 12 அடி நீளமுள்ள நைல் முதலை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்டோரியா நீர்வீழ்ச்சி அருகே உள்ள இந்த ஹோட்டலில், சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. யாருக்கும் காயம் ஏற்படாதது மட்டுமே ஆறுதலாக கூறப்படுகிறது.
நதியிலிருந்து ஹோட்டலுக்கு வந்த அதிர்ச்சி விருந்தினர்
சாம்பேசி நதிக்கரையில் அமைந்துள்ள ஹோட்டலுக்குள், நதியிலிருந்து வெளியேறிய நைல் முதலை சாவகாசமாக நடந்துகொண்டு வந்ததாக தகவல். அப்போது லாபியில் இருந்தவர்கள் இதைக் கண்டு பதறினர். நேராக ரிசப்ஷன் கவுண்டருக்குச் சென்ற அந்த முதலை, அதன் மேல் ஏற முயன்றதாகவும் கூறப்படுகிறது.
பயணிகள் பதற்றம் – ஊழியர்கள் சாமர்த்தியம்
இந்த காட்சியை பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் நின்றபோதும், ஹோட்டல் ஊழியர்கள் அமைதியாக செயல்பட்டனர். உடனே அந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து, யாரும் அருகில் செல்லாதபடி கவனித்தனர். தகவலின்படி, ஒரு பயணி கூறுகையில், அந்த முதலை ‘விருந்தினராக’ நடந்து கொண்டதாகவும், ரிசப்ஷனில் யாரும் இல்லாததால் கிச்சன் பகுதியை நோக்கி சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சாலையில் உலா வந்த 10 அடி நீளம் கொண்ட முதலை! என்னம்மா நடக்குது..... அதிர்ச்சி காட்சிகள்..!!!
வனத்துறை நடவடிக்கை – பாதுகாப்பாக மீட்பு
இதையடுத்து சொகுசு ஹோட்டல் நிர்வாகம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தது. அவர்கள் விரைந்து வந்து கயிறுகள் உதவியுடன் முதலையைப் பிடித்து, மீண்டும் சாம்பேசி நதியில் விட்டனர். சம்பவத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட ஹோட்டல் நிர்வாகம், ‘ரூம் சர்வீஸ் தாமதமானதால் விருந்தினர் நேரில் வந்தார்’ என சமூக வலைதளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திக் திக் நிமிடம்! அங்கே போகாதே.... வா... போட்டோ எடுக்கப்போன இடத்தில் நடந்த திகில் காட்சி!