×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டுவைக்காத டிராபிக் ஜாம்; வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்.!

yeaverest hills nebaul - traffic jam - local train mumbai

Advertisement

உலகின் மிகப் பெரிய மலை சிகரம் எவரெஸ்ட். 8,848 மீட்டர் உயரம் கொண்ட இச்சிகரம் நேபாளம் நாட்டில் உள்ளது. இயற்கை எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த இம்மலைக்கு ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். மேலும், அதன் உச்சிக்கே சென்று தங்களது மலையேறும் ஆசையினையும் தீர்த்துக் கொள்கின்றனர்.

இவ்வாண்டு மலையேறும் சீசன் மே 14ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. இதனால் மலையேறும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நெருங்கும் வேளையில் சுமார் 350க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளால் அப்பகுதி முழுவதும் மக்களின் நெரிசல் அதிகரித்துள்ளது.



 

இதனை படம் பிடித்த ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது. 
தற்போது மலையில் நீளமான வரிசையில் காத்திருப்போரின் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் எவரெஸ்ட் சிகரத்திலும் டிராபிக் ஜாம் உருவாகி விட்டது என கமெண்ட் செய்து வருகின்றனர்.



 

சிலர் மனிதகுலம் இயற்கையை எப்படி பாதித்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு சிறந்த உதாரணம் என விமர்சிக்கிறார்கள். ஒருவர் மும்பை லோக்கல் டிரெயினில் ஏற காத்திருப்பவர்கள் போல இருப்பதாகக் கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trafic jam #world #international
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story