அடி ஆத்தீ....இது தான் நிஜமான பரமபத விளையாட்டு... பாம்புகளே காய்களாக, பெண்ணே பகடையாக... கொத்த வரும் நிஜ பாம்பு! திக் திக் திகில் வீடியோ..!!!
நிஜ பாம்புகள் நிறைந்த அறையில் பெண் ஒருவர் பரமபதம் விளையாடும் அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் தினமும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும் நிலையில், தற்போது இணையத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒரு வீடியோ அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. நிஜமான பாம்புகள் நிறைந்த அறைக்குள் ஒரு பெண் பரமபதம் விளையாட்டு விளையாடும் காட்சி வெளியாகி, நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புகளுக்கு நடுவே விளையாடிய பெண்
பொதுவாக அட்டைகள் அல்லது செல்போன் செயலிகளில் விளையாடப்படும் பரமபதம் விளையாட்டை, இந்தப் பெண் முற்றிலும் வேறுபட்ட முறையில் நிஜ பாம்புகளின் நடுவே விளையாடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது. தரையில் ஏணிகள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் பகடையை உருட்டி வரும் எண்ணிக்கைக்கு ஏற்ப நகர்கிறார்.
இதையும் படிங்க: உடம்பெல்லாம் புல்லரிக்குது! படுக்கையறையில் பெட்ஷீட் கீழ் கொத்து கொத்தாக நெளிந்த பாம்புகள்! பகீர் காட்சி...
பார்ப்பவர்களை பதற வைத்த காட்சி
அவர் நகரும் இடங்களில் சுற்றித் திரியும் பாம்புகள் திடீரென பாய்வதும், அங்கும் இங்கும் துள்ளிக் குதிப்பதும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களுக்கே பயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. குறிப்பாக அங்கிருந்தவர்கள் அலறுவதும் சிரிப்பதுமான சத்தங்கள் கேட்பது அந்த சூழ்நிலையின் பதற்றத்தை வெளிப்படுத்துகிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வைரல் வீடியோ இதுவரை 40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப் பார்த்த பல நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். “விளையாடுவது நீங்கள் என்றாலும், இதைப் பார்த்து எனக்குத்தான் கால் நடுங்குகிறது” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட பாம்புகள் விஷமற்றவையாக இருக்கலாம் என சிலர் கருதினாலும், இத்தகைய ஆபத்தான செயல்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக முடியும் என்ற கருத்தும் சமூக வலைதளங்களில் வலுப்பெற்று வருகிறது. அதனால் இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்திலும் கவலையிலும் ஆழ்த்தி தொடர்ந்து பரவி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளி வகுப்பறையில் கூரையை உடைத்துக் கொண்டு உள்ளே விழுந்த 20 அடி நீள அனகோண்டா! நடு நடுங்க வைக்கும் வீடியோ!