26 ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்த தபால் அட்டை! திறந்து பார்த்த பெண்ணுக்கு காத்திருந்த ஆச்சரியம்!
Woman gets postcard sent 26 years ago

பிரான்ஸ் நாட்டில் 26 வருடங்களுக்கு முன்பு அனுப்பப்பட்ட தபால் ஓன்று தற்போது சரியான விலாசத்திற்கு வந்தடைந்த சுவாரசியமான சம்பவம் ஓன்று அனைவரைம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Vieux-Boucau(Landes) என்ற நகரில் வசிக்கும் Quitterie Darriau என்ற பெண் தனது வீட்டில் இருக்கும் தபால் பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அந்த தபால் பெட்டியில் புதிதாக தபால் ஓன்று வந்திருப்பதை அந்த பெண் பார்த்துள்ளார். தபாலில் விவரத்தை பார்த்த அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த தபால் நான்ஸி என்னும் நகரில் இருந்து 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட அந்த தபால் தற்போது கிடைத்துள்ளதை நினைத்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதில் மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் 26 ஆண்டுகள் ஆகியும் அந்த தபால் அட்டை கிழியவோ அல்லது பழசோ ஆகாமல் பார்ப்பதற்கு புதிதாகவே இருந்துள்ளது. வீட்டின் முகவரியேல் ஏற்பட்ட குழப்பமே இந்த சமப்வத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.