×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 ஜீன்ஸ் பேண்டுகளை திருடிய இளம்பெண்! ஒவ்வொன்றாக கழட்டச் சொல்லும் செக்யூரிட்டி! வைரல் வீடியோ.!

Woman caught stealing 8 jeans in a store by wearing them all at once

Advertisement

உலகின் பல்வேறு இடங்களில் தினம் தினம் வித்தியாசமான ஏதவது ஒரு நிகழ்வு நடப்பது வழக்கமான ஓன்று. அதிலும் சிலர், சாமர்த்தியமாக திருடுவதும், பின்னர் மாட்டிக்கொள்வதும் போன்ற வேடிக்கையான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன.

அந்த வகையில் வெனிசுலா நாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அங்கிருக்கும் துணி கடை ஒன்றில் 8 ஜீன்ஸ் பேண்டுகளை சாமர்த்தியமாக திருடுகிறார். மேலும், திருடிய பேண்டுகளை மறைப்பதற்காக அந்த 8 பேண்டுகளையும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக உடுத்தியுள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண் கடையில் இருந்து வெளியேற முற்பட்டுள்ளார். அப்போது அந்த பெண் மீது சந்தேகமடைந்த கடையின் காவலர் அந்த பெண்ணை சோதனை செய்ததில் அவர் ஒன்றன் மீது ஒன்றாக பேண்ட் அணிந்திருந்ததை கண்டுபித்தனர்.

இதனை அடுத்து கடையின் செக்யூரிட்டி அப்பெண்ணை கழிவறைக்குள் அழைத்து சென்று, திருடிய பேண்டுகளை அகற்ற கூறுகிறார். தற்போது அந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Mystry #myths #Crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story