செம.... விமானத்தில் முழு தேங்காய்யை கொண்டுப்போன நபர்! காரணத்தை கேட்டால் ஆடிப்போயிடுவீங்க..!! வைரல் வீடியோ!
விமானப் பயணத்தில் 100 மில்லிலிட்டருக்கு மேல் திரவங்களுக்கு தடை உள்ள நிலையில், முழு தேங்காயை எடுத்துச் செல்லும் வித்தியாசமான யுக்தி வைரலாகியுள்ளது.
விமானப் பயணத்தில் பாதுகாப்பு விதிகளை மீறாமல் புத்திசாலித்தனமாக செயல்பட்டால், பயண அனுபவமே மாறிவிடும். அதற்கு எடுத்துக்காட்டாக, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
விமான பாதுகாப்பு விதிகள் என்ன சொல்கின்றன?
பொதுவாக விமானப் பயணத்தின் போது, கைப்பையில் 100 மில்லிலிட்டருக்கு மேல் எந்த திரவத்தையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த விதி உலகின் பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட திரவப் பொருட்களை பயணிகள் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வைரலான முழு தேங்காய் யுக்தி
இந்த நிலையில், ஒரு பயணி விமானத்தில் முழு தேங்காய் ஒன்றை எடுத்துச் சென்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் முதலில் அறைக்குள் தேங்காயைக் காட்டுகிறார். பின்னர் அதையே விமானத்தின் உள்ளே எடுத்துச் சென்றிருப்பதும் பதிவாகியுள்ளது.
இதற்கு பின்னணி என்ன?
இதுகுறித்து விளக்கம் அளித்த அந்த நபர், விமானத்தில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றாலும், வெட்டப்படாத முழு தேங்காய்களுக்கு தடையில்லை என கூறுகிறார். பயணத்தின் போது தேங்காயை திறந்து அதிலுள்ள தண்ணீரைக் குடிக்கலாம். இதன் மூலம் முழு பயணத்திலும் உடலை நீரேற்றம் நிலையில் வைத்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க TSA விதிகள்
இந்த விதிமுறை அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளதாகவும், அங்குள்ள TSA (Transportation Security Administration) பாதுகாப்பு விதிகளின்படி 100 மில்லிலிட்டருக்கு மேல் திரவங்களை கைப்பையில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த தடையை சட்டபூர்வமாகத் தவிர்க்க, அவர் முழு தேங்காயை தேர்வு செய்துள்ளார்.
சமூக ஊடகங்களில் எதிர்வினை
இந்த வீடியோவை X தளத்தில் @SolBrah என்ற கணக்கு பகிர்ந்துள்ளது. சுமார் 5 விநாடிகள் மட்டுமே கொண்ட இந்த காணொளி, இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வித்தியாசமான பயண யுக்தி குறித்து சமூக ஊடகங்களில் கலகலப்பான கருத்துகள் வெளியாகி வருகின்றன.
விமானப் பயணத்தில் விதிகளை அறிந்து செயல்பட்டால், இப்படியான சிக்கலற்ற மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை உருவாக்க முடியும் என்பதை இந்த வைரல் வீடியோ தெளிவாக உணர்த்துகிறது.