×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னாது...பொதுவெளியில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாமா?.. புதிய சட்டத்தால் ஆர்வத்தில் பெண்கள்..!!

என்னாது...பொதுவெளியில் பெண்கள் மேலாடையின்றி குளிக்கலாமா?.. புதிய சட்டத்தால் ஆர்வத்தில் பெண்கள்..!!

Advertisement

ஜெர்மனியில் கோடைக்காலம் தொடங்குவதால் நீச்சல் குளங்கள் , சூரிய குளியல் செய்யும் இடங்கள் களை கட்ட தொடங்கியுள்ளது.

பெண்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் பெண்கள் நீச்சல் குளங்கள், போன்ற இடங்களில் மேலாடையின்றி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில், கடந்த டிசம்பர் மாதம் ஒரு பெண் மேலாடையின்றி குளித்ததற்காக நீச்சல் குளத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீச்சல் குளத்தில் அனைவரும் ‌மேலாடையின்றி குளிக்க உரிமை இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஜெர்மனியின் சமூக ஆரவலர்கள் இது குறித்து கூறுகையில் பொது வெளிகளில் நிர்வாணமாக இருப்பது உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. நிர்வாணமாக மனிதர்களை பார்த்து பழகி விட்டால் உடல் தோற்றம் குறித்த சிந்தனைகள் நம்மிடம் இருக்காது என்கின்றனர். வெளித்தோற்றத்தை வைத்து மக்களை பார்க்காமல் உள்ளத்தை சீர்தூக்கி பார்க்க முயலலாம் என்று கூறுகின்றனர்.

ஜெர்மனியில் ஆண்களும் பெண்களும் மேலடையின்றி நீச்சல் குளங்களில் குளிக்கலாம் என்ற வரையறை 1918 முதல் 1933 வரை இருந்தது. அப்போது கடற்கரையில் இருபாலரும் மேலாடையின்றி குளித்தனர். 1942 ஹிடலர் ஆட்சிக்கு பின்னர் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு ஜெர்மன் முழுவதும் உடல் கலாச்சாரம் குறித்த புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டது.

தற்போது பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களில் குளிக்கலாம் என்ற புதிய சட்டம் மூலமாக உடல் தோற்றத்தை வைத்து ஒருவரை மதிப்பிடும் நிலை மாறும் என்று கருதப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#world #Germany #Women #Take a Bath Without a Top in Public
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story