தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணிக்கு வரும் பெண்கள் குட்டைப்பாவடை அணிந்து வந்தால் அதிக சம்பளம்!

Wearing skater girl is a high salary

Wearing skater girl is a high salary Advertisement


ரஷ்யாவில் அலுமினியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இந்த மாதத்தில் "பெமினிட்டி மாரத்தான்" என்ற கேம்பெயின் நடத்தி வருகிறது. இந்த கேம்பெயினில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இந்த கேம்பெயினில் கலந்து கொள்ளும், பெண்கள் பணிக்கு வரும் போது அவர்களது முட்டிக்கு 5 சென்டி மீட்டருக்கு கீழே இறங்காத அளவிலான ஸ்கட் அணிந்து வந்தால் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா சம்பளம் கொடுக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

skater dreess

ஜூன் மாதம் முழுவதும் 30 நாட்கள் நடக்கும் இந்த கேம்பெயினில் ஒவ்வொரு நாளும் இவ்வாறான ஆடைகள் அணிந்து வந்தால் அவர்களுக்கு 100 ரஷ்ய ரூபெல் பணத்தை அந்நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேம்பெயின் மூலம் பெண்கள் உடைகள் அணிவதில் மன தடுமாற்றத்தை போக்குவது, உடைகளில் பெண்கள் வெட்கப்பட வேண்டியது இல்லை என்பதை உணர வைக்கவும், பயத்தை போகவும் இது நடத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு பல இடங்களில் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்துள்ளது. பெண்களை குறைவான ஆடை அணியவைத்து அதற்கு அந்நிறுவனம் பணம் வழங்குவது மிக கீழ் தரமான செயல் என பலர் அந்நிறுவனத்தின் இந்நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#skater dreess #foreign womens #high salary
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story