எகிப்து பிரமிட் உச்சியில் கசமுசா செய்த தம்பதியினர்! அதிர்ச்சி வீடியோ!
Viral video of young couple in egypt
உலகிலுள்ள அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது கிசாவின் எகிப்து பிரமிடு ஆகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த அதிசயமானது இன்று உலகின் முக்கிய சுற்றுலாத்தலமாக கருதப்படுகிறது. உலகின் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாவாசிகள் இந்த இடத்திற்கு வருவது உண்டு.
இந்நிலையில் பிரமிடை காணவந்த வெளிநாட்டு தம்பதியினர், பிரமிட்டின் உச்சிக்கு இரவு நேரத்தில் சென்று அங்கு நிர்வாணமாக கட்டித்தழுவி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று எகிப்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதைப் பற்றி விசாரித்த தொல்பொருள் துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட தம்பதியினர் இருவரையும் கைதுசெய்துள்ளதாகவும் மேலும் அவர்களை உச்சிக்கு அழைத்து சென்ற இருவர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
உலகின் அதிசயமாக கருதப்படும் எகிப்து பிரமிடில் தம்பதியினர் இவ்வாறு நடந்து கொண்டது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.