×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 வருஷமா மனைவி என்னை படுத்துற பாட்டை பாருங்க....இனிமேல் பொறுக்க முடியாது! ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட கணவர்! மனைவியின் சித்திரவதை வீடியோ!!!

மனைவி தாக்கியதாக கணவர் குற்றச்சாட்டு; ரகசியமாக பதிவு செய்த வீடியோ வைரல். ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்து சமூகத்தில் விவாதம் கிளம்பியது.

Advertisement

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, குடும்ப உறவுகளில் மறைந்திருக்கும் கடுமையான உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. ‘X’ தளத்தில் பகிரப்பட்ட இந்த காட்சியில், மனைவி தாக்கியதாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரகசியமாக பதிவு செய்த காட்சி

தகவலின்படி, சம்பந்தப்பட்ட நபர் தனது மடிக்கணினி மூலம் இந்த காட்சியை ரகசியமாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், பெண் ஒருவர் கணவரை பலமுறை கன்னத்தில் அறைவதும், தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்குவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. நீண்ட நாட்களாக நடந்துவரும் குடும்ப வன்முறைக்கு ஆதாரம் சேர்க்கும் நோக்கில்தான் இந்த பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த துன்புறுத்தல்

“கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக பொறுத்துக் கொண்டேன். இப்போது தான் இதை வெளியில் காட்ட முடிவு செய்தேன்” என்று அந்த கணவர் குறிப்பிட்டதாக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: தினமும் இப்படித்தான் பண்ணுவ.... என்னால தாங்க முடியல! மனைவியின் கொடூர முகத்தை காட்டிய ரகசிய கேமரா.... வைரலாகும் மனைவியின் சித்திரவதை வீடியோ !!!

சமூக வலைதளங்களில் கடும் விவாதம்

இந்த viral video வெளியாகியதன் பின்னர், ஆண்களுக்கு எதிரான வன்முறை குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. “இது உரிமை அல்ல, தவறான நடத்தை” என சிலர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், “ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் பேசப்பட வேண்டும்” என்ற கருத்துகளும் எழுந்துள்ளன. சமூகத்தில் பாலினம் கடந்து வன்முறையை எதிர்க்க வேண்டிய அவசியம் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #domestic violence #குடும்ப வன்முறை #Husband abuse #Social media debate
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story